இனியாவுக்கு தங்க மனசு

இனியாவுக்கு தங்க மனசு

Iniya

நவம்பர் 21, இனியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பை விட குத்துப் பாடலுக்குத்தான் அதிகம் வாய்ப்பு வருகிறதாம். ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று காத்திருந்தால் இருக்கிற வாய்ப்பும் பறிபோகும் என்பதால் வருகிற வாய்ப்புகளை ‘நோ’ சொல்லாமல் ஒப்புக்கொள்கிறாராம்.

அத்துடன் இனியாவிடமும் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளதாம். ஹீரோயினாக நடிக்கும்போது ஸ்டார் ஓட்டல், பிசினஸ் கிளாஸ் டிக்கெட் என்று கண்டிஷன் போட்ட இனியா இப்போது தயாரிப்பாளரின் கஷ்டத்தைப் புரிந்தவராக நடந்து கொள்கிறாராம். பொண்ணுக்கு தங்க மனசு.