என் தமிழ்

திரங்கானுவில் வெள்ளம்: ஆற்றில் சிக்கி ஒருவர் பலி

images (10)

நவம்பர் 21, கடந்த சில நாட்களாக திரங்கானுவில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பேரிடரால் கம்போங் புக்கிட் வான் அருகிலுள்ள ஆற்றில் தற்போது ஒருவர் பலியாகியுள்ளார்.
48 வயதுள்ள முடா அப்துல்லா என நம்பப்படும் இந்த ஆடவர், வியாழக்கிழமை இரவு 8.30 மணியளவில் தொழுகை முடிந்து திரும்பிய அப்பகுதியின் மக்களால் கண்டுப்பிடிக்கப்பட்டார். மாலை 5.00 மணியளவில் அவர் வீட்டில் இல்லாததைத் தொடர்ந்து அவரை தேடும் பணி தொடங்கியது.
அவர் பொதுவாக பயன்படுத்தும் காலணி மற்றும் குடை ஆகியவை ஆற்றின் ஓரத்தில் கிடந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை தேடும் பணியில் தீவிரமாயினர். பல மணி நேர தேடல் நடவடிக்கைக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட முடாவின் உடல் சவ பரிசோதனைக்காக சுல்தானா நுர் சஹிரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

Scroll to Top