எபோலா வைரஸால் 5,420 பேர் உயிரிழந்துள்ளதாக தொவித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு

எபோலா வைரஸால் 5,420 பேர் உயிரிழந்துள்ளதாக தொவித்துள்ளது: உலக சுகாதார அமைப்பு

Ebola Virus

நவம்பர் 20, உலக சுகாதார அமைப்பு நேற்று வெளியயிட்ட தகவலின்படி 8 நாடுகளில் எபோலா வைரஸால் 5,420 பேர் உயிரிழந்துள்ளதாக தொவித்துள்ளது. கடந்த 2013 சைம்பர் மாதம் முதல் எபோலா வைராஸால் மொத்தம் 15,145 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமையில் ஐ.நா. சுகாதார நிறுவனம் அளித்த தகவலின்படி 5,117 பேர் உயிரிழந்ததாகவும், 14,413 பேர் எபோலாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தது. இதுகுறித்த தெரிவித்த உலக சுகாதார அமைப்பு எபோலாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், உயிரிழப்பு 70 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சமீபத்தில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, நவம்பர் 16ம் தேதி வரை லைபீரியாவில் 2,924 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 7,069 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிரியி£வில் 1,250 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6,073 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், குனியாவில் 1,192 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1,971 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், தெரிவித்துள்ளது.

சமீபத்தில் எபோலாவால் தாக்குதலுக்கு உள்ளான மாலியில், 5 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகறிது.

மேலும் நைஜுரியாவில் 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், செனெகல் நாட்டில் ஒருவர் எபோலாவால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உலக சுகாதார அமைப்பு தகவல் அளித்துள்ளது.