இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட5 மீனவர் சிறையிலிருந்து விடுதலை

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட5 மீனவர் சிறையிலிருந்து விடுதலை

Tamil_News_3422771692277

நவம்பர் 20, தூக்கு தண்டனையை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 5 பேர் மீதான வழக்குகளை இலங்கை அதிபர் ராஜபக்சே ரத்து செய்தார். இதைதொடர்ந்து மீனவர்கள் 5 பேரும் நேற்று விடுதலை செய்யப்பட்டு இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இன்று காலை தமிழகம் திரும்புகின்றனர்.

இதற்கிடையே, இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்யவும், மீனவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கவும் இலங்கை அதிபர் ராஜபக்சே ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியானது. மேல்முறையீட்டு வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் மீனவர்களை விடுதலை செய்ய முடியாது. மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றால்தான் பொதுமன்னிப்பு வழங்க வசதியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பு ஐகோர்ட் நீதிபதிகள் விஜித் கே.மலால்கோடா, நவாஸ் ஆகியோர் கொண்ட அப்பீல் பெஞ்ச் முன்பு தமிழக மீனவர்கள் 5 பேர் சார்பில் ஆஜரான வக்கீல், அப்பீலை வாபஸ் பெறுவதற்கான மனுவை நேற்று தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, தூக்கு தண்டனை எதிர்த்த அப்பீல் மனு வாபஸ் பெறப்பட்டதாக நேற்று காலை அதிகாரபூர்வ அறிவிப்பை இலங்கை அதிபர் மாளிகை வெளியிட்டது. இலங்கை அமைச்சர்கள் ஆறுமுக தொண்டைமான், செந்தில் தொண்டைமான் ஆகியோர் நேற்று காலை 9 மணி அளவில் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து 5 மீனவர்களை விடுதலை செய்வது பற்றி ஆலோசனை நடத்தினர்.

முதலில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே முடிவு செய்து அதற்கான உத்தரவை அளித்திருந்தார். தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டாலும், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் 5 மீனவர்களும் இந்திய சிறையில் தான் இருக்க முடியும். இதுதொடர்பாக ஆலோசனை நடத்த மத்திய அமைச்சர் ஆறுமுக தொண்டமான் உள்ளிட்ட தலைவர்கள் அதிபர் ராஜபக்சேவை சந்தித்து ஆலோசனை நடத்தினோம். அப்போது 5 மீனவர்களின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டாலும் அவர்கள் மீண்டும் சிறை யில் இருக்கும் நிலை உள்ளது. எனவே அவர்களை முழுமையாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினோம். இதனையடுத்து தனது நிலைப்பாட்டை இலங்கை அதிபர் ராஜபக்சே மாற்றிக்கொண்டு 5 மீனவர்கள் மீதான வழக்கையும் வாபஸ் பெற்று அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்டார். இவ்வாறு செந்தில் தொண்டமான் கூறினார். 5 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டது ராமேஸ்வரம், புதுக் கோட்டை, நாகை, காரைக்கால் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் இடையே பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் 5 பேரும் தமிழகத் துக்கு இன்று திரும்புகிறார்கள். இன்று காலை 8.50 மணிக்கு திருச்சிக்கு விமானத்தில் வரும் அவர்கள் அங்கிருந்து சொந்த ஊருக்கு செல்கின்றனர்.