என் தமிழ்

ஜோதிகா: படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது

At-the-launch-of-Laxmi-Sarees-320x263

நவம்பர் 18, மலையாளத்தில் மஞ்சு வாரியார் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘ஹவ் ஓல்டு ஆர் யூ’ படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில், மஞ்சுவாரியார் நடித்த கதாபாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கும் ஜோதிகாவுக்கு ஜோடியாக ரகுமான் நடிக்கிறார். மலையாள படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூவ்ஸ் தமிழ் ரீமேக்கையும் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியது. டெல்லியில் முதல்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. தொடர்ந்து உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இன்று தொடங்கும் முதல்கட்ட படப்பிடிப்பில் ஜோதிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை சூர்யா தனது சொந்த நிறுவனமான 2டி எண்டர்டெய்ன்மென்ட் மூலம் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

Scroll to Top