நவம்பர் 14, தாய்மொழிக் கல்வி அழிக்கப்பட வேண்டும் என்கின்ற சர்ச்சையை கிளப்பும் மலாய் அரசியல்வாதிகள் தங்கள் சுயவிளம்பரத்துக்காகவே அவ்வாறு செய்கிறார்கள் அவர்களது கோரிக்கையில் எந்தவித ஆதாரப்புள்ளி விவரமும் கிடையாது என துரை சார்ந்த நிபுணர்கள் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கூறினார்.
தாய்மொழிப் பள்ளிகள் சமுதாயத்தில் பிளவை ஏற்படித்துகின்றன என இந்த மலாய் மேலாண்மை தலைவர்கள் கூறுகின்றனர். அவர்கள் அவ்வாறு கூறுவதற்கு ஆதாராமாக எந்தவித புள்ளி விவரமும் கிடையாது என அவர்கள் குறிப்பிடுகின்றனர். கொள்கை ஆய்வாளர் டாக்டர் லிம் டெக் கீ, பாரிசானில் உள்ள அரசியல்வாதிகள் முயற்சி ஒரு போதும் பலிக்காது என கூறுகிறார்.