தில்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே கேட்பாரற்று 3 பைகள் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தில்லியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வெளியே கேட்பாரற்ற நிலையில் 3 பைகள் கிடந்தன. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டு, 3 பைகளை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் முடிவில் அந்த 3 பைகளிலும் துணிகள் இருந்தது தெரியவந்தது. இதன் பின்னரே அங்கு நிலவிய பதற்றம் தணிந்தது.