சென்னை: சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும் திருப்பதியில் வைத்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்களாம். மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும் சரவணன், மீனாட்சி என்ற கதாபாத்திரத்தில் மதுரை என்னும் தொலைக்காட்சி தொடரில் நடித்தனர். அதன் பிறகு சரவணன், மீனாட்சி என்ற விஜய் டிவி தொடரில் கணவன் மனைவியாக நடித்தனர்.
அவர்களை டிவியில் பார்த்தவர்கள் நிஜத்திலும் அவர்கள் கணவன் மனைவி என்று நினைத்தனர். அவர்களின் நினைப்பு பொய்யாகவில்லை. ஆம் செந்திலும், ஸ்ரீஜாவும் நிஜத்திலும் கணவன் மனைவி ஆகிவிட்டனர். அவர்கள் இருவரும் திருப்பதியில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த ரகசிய திருமணம் அண்மையில் தான் நடைபெற்றுள்ளது. கமுக்கமாக திருமணத்தை முடித்துவிட்டு யாருக்கும் அவர்கள் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தகவல் கசிய அதை கேட்ட அனைவரும் அப்படியா ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Previous Post: தில்லி பா.ஜ.க, அலுவலகத்தில் மர்ம பைகளால் பரபரப்பு
Next Post: திகில் படத்தில் டபுள் ஹீரோயின்