நவம்பர் 12, இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு மலேசிய நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், மேக் இன் இந்தியா பிரச்சாரத்திற்கு பிறகு அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
12 ஏசியன் இந்தியா உச்சி மநாட்டில் பங்கேற்க மியான்மர் சென்றுள்ள பிரதமர் மோடி, மியான்மர் சரவதேச கன்வென்ஷன் செண்டரில் மலேசிய பிரதமர் நஜீப் ராசாக்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, கடந்த காலங்களில் மலேசியாவும் இந்தியாவும் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளன. எனது தலைமையில் இரு நாடுகளும் மேலும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் பிரதமர் மோடி, நஜீப் ஜங்கிடம் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு பிறகு பிரதமர் மோடி தனது டிவிட்ட்டரில் மேக் இன் இந்தியா விற்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறேன். மலேசியன் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என விரும்புகிறேன். அங்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார்.