ஆசிரம வளாகம் பண்பாட்டு கேந்திரம்: நூருல் இஸா

ஆசிரம வளாகம் பண்பாட்டு கேந்திரம்: நூருல் இஸா

vik

நவம்பர் 10, விவேகானந்தா ஆசிரமத்தை காப்போம் என்னும் எழுச்சி முழக்கத்துடன் பிரிக்பீட்ஸில் கூடிய பல்லாயிரக் கணக்கான மலேசியர்களில் நூருல் இஸா அன்வாரும் ஒருவர்.

நான் ஒரு மலாய் முஸ்ஸிம், ஆனால் நான் ஒரு மலேசியர் என்னும் முறையில் இது எனது பாரம்பரியத்தின் ஒர் அங்கம் என மஞ்சள் வண்ண ரிப்பனை அணிந்து, விவேகானந்த ஆசிரமத்தை காப்போம் என்னும் விண்ணப்பத்தில் கையெழுத்திட்ட போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வரலாற்றையும், பின்னணியையும், கலாச்சார நடவடிக்கைகளையும் கருத்தில் கொண்டால் இளைஞர்களின் எழுச்சிக்காக இந்த ஆசிரமத்த மறுமேம்பாட்டுக்கு உட்படுத்த கூடாது என்றார் அவர்.