என் தமிழ்

மற்றவர்களுக்காக என்னை மாற்றிக்கொள்ள முடியாது

shruthi-hassan

நவம்பர் 10, என் உடல் கோயில் போன்றது. அதை மற்றவர்கள் எப்படிப் பார்த்தாலும் எனக்கு கவலை  இல்லை என்றார், ஸ்ருதிஹாசன். படங்களில் அதிக கவர்ச்சி காட்டி நடிப்பது குறித்து கேட்டபோது இவ்வாறு சொன்னார். சில படங்களில் கிளாமராகத் தோன்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த கேரக்டருக்கு முக்கியமாக அது தேவை என்றால் இப்படித்தான் நடிக்க வேண்டும். அதை சிலர் விரும்புகிறார்கள், சிலர் விரும்புவதில்லை. இது அவரவர் விருப்பம். என் உடல் எனக்கு கோயில் போன்றது. சிலர் அதை கிளாமர் உடையுடன் பார்க்க விரும்புகிறார்கள். சிலர் சாதாரண தோற்றத்தில் பார்க்க நினைக்கிறார்கள். எனவே, அவர்களுக்காக என் செயல்பாடுகளையோ, குணத்தையோ மாற்றிக்கொள்ள முடியாது என்றார் ஸ்ருதிஹாசன்.

Scroll to Top