நவம்பர் 7, தமிழில் சார்மிக்கு படம் இல்லை. காரணம், அவரை நடிக்க வைத்தால் ராசியில்லை என்று சில இயக்குனர்கள் சொல்கிறார்கள். என்றாலும், தெலுங்கில் சார்மிக்கான இடம் அப்படியே இருக்கிறது.
அதை நினைத்து மகிழ்ச்சி அடையும் அவர், ஒளிப்பதிவாளர் எஸ்.டி.விஜய்மில்டன் இயக்கும் பத்து எண்றதுக்குள்ள படத்தில், ஒரு பாடலுக்கு செம குத்தாட்டம் போட சம்மதித்துள்ளார். விக்ரம், சமந்தா ஜோடியாக நடிக்கும் இந்தப்படம், நெடுஞ்சாலையில் நடக்கும் ஒரு அதிரடி சம்பவத்தை மையமாக வைத்து உருவாகிறது.
தமிழில் ஏற்கெனவே உதயம் என்.எச்.4, நெடுஞ்சாலை படங்கள் நெடுஞ்சாலையை மையப்படுத்தி உருவானவை. இப்போது விமல் நடிக்கும் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படமும் நெடுஞ்சாலை டிராவலை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. பத்து எண்றதுக்குள்ள… படம், தமிழில் தனக்கு டர்னிங் பாயின்டாக அமையும் என்று நம்பும் சார்மி, கிளாமருக்கு கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறாராம்.