என் தமிழ்

அன்வார் மீதான வழக்கில்: தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

IBRAHIM-395

நவம்பர் 8, ஓரினப் புணர்ச்சி வழக்கில், டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு வழங்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனைக்கு எதிரான இறுதி மேல்முறையீட்டு வழக்கின் இறுதி நாளான இன்று இரு தரப்பு வாதங்களும் சமர்ப்பிக்கப்பட்டு விட்ட நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான இரண்டாவது ஓரினப் புணர்ச்சி வழக்கில், அவருக்குக் கடந்த மார்ச் 7-ஆம் தேதி உயர்நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

எனினும், தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மேல் முறையீடு வழக்கு பதிவு செய்தார். கடந்த ஆகஸ்டு 28-ஆம் தேதி தொடங்கிய இவ்வழக்கு செவிமெடுப்பு எட்டாவது நாளாக இன்று நடைபெற்றது.

இரு தரப்பு வாதமும் சமர்ப்பிக்கப்பட்டு விட்ட நிலையில் இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. எனினும், தற்போது தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Scroll to Top