பொது போக்குவரத்து கட்டணம் உயரும்

பொது போக்குவரத்து கட்டணம் உயரும்

13THFLYOVER_949902f

நவம்பர் 4, நாடி முழுமையும் பொது போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்கும் படி, போக்குவரத்து அமைச்சகத்தை தரை போக்குவரத்து ஆணையம் சிபாரிசு செய்திருக்கிறது.

தரை போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் சையட் ஹமிட் அல்பார் மேற்கண்ட கட்டண உயர்வின் முடிவு போக்குவரத்து அமைச்சகத்தின் கைகளில் உள்ளது என கூறினார்.

பேருந்து நடத்துனர்களும் வாடகை கார் ஒட்டுபவர்களும் கட்டணத்தை 30 முதல் 40 விழுக்காடுவரை உயர்த்த அரசாங்கம் அனுமதிக்கும் என எதிர்பார்க்கின்றனர். தங்களின் கோரிக்கை நியாமானது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.  அதிகரித்து வரும் செலவினங்களை கருத்தில் கொண்டு, அந்த கட்டண உயர்வு நியாமானது என்பதை ஆணையம் உணர்கிறது என்றார் சையட் ஹமிட்.