விபசார வழக்கில் கைது: சூழ்நிலையால் பாதிக்கப்பட்டேன் சுவேத பாசு மனம் திறந்த பேட்டி

விபசார வழக்கில் கைது: சூழ்நிலையால் பாதிக்கப்பட்டேன் சுவேத பாசு மனம் திறந்த பேட்டி

Swetha-Basu-Out-From-Rescue-Home

பிரபல இந்தி நடிகையான சுவேதா பாசு கடந்த சில தினங்களுக்கு முன் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விபசாரத்தில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். பட வாய்ப்புகள் இல்லாததால்தான் பண நெருக்கடிக்கு ஆளாகி விபசார தொழிலுக்கு தள்ளப்பட்டதாக சுவேதா பாசு கண்ணீர் மல்க விளக்கமும் அளித்து இருந்ததாக செய்திகள் வெளியிடபட்டது.

பின்னர், நீதிமன்ற உத்தரவின்படி அவர் ஐதராபாத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் 3 மாதங்கள் வரை தங்குவதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது கோர்ட் அவரை அவரது தயாருடன் செல்ல அனுமதி அளித்து உள்ளது.

இது நாள வரை மீடியாக்களிடம் எதுவும் கூறாமல் இருந்த சுவேதா பாசு தற்போது முதல் முறையாக வாய் திறந்து உள்ளார்.

இது குறித்து சுவேதாபாசு கூறியதாவது:-

நான் எதையும் கூறாமல் அவர்களாக எழுதிய பத்திரிக்கையாளர்களை தவிர வேறு யார் மீதும் நான் குறை கூற விரும்பவில்லை. என் விளக்கத்திற்காக மீடியா காத்திருந்திருக்க வேண்டும். நான் காவலில் இருந்ததால் எந்த அறிக்கையும் வெளியிட முடிய வில்லை. குறிப்பாக எனது தாய் தந்தையருடன் கூட என்னை பேச அனுமதிக்க வில்லை அப்படி இருக்கும் போது நான் எப்படி மீடியாகாரர்களை சந்திக்க முடியும்.

என்னைபற்றி வந்த் செய்திகளால் என்னை சுற்றி உள்ள கதவுகள் அனைத்தும் மூடபட்டு விட்டன. என்னுடைஅய புகழுக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது.எபோதும் திரைப்படதுறையில் எனக்கு ஆதரவு இருந்தது.

என்னை யாரும் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தவில்லை. எனக்கு சினிமா துறையில் நல்ல வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தன.விபசாரத்திற்காக எந்த ஏஜெண்டும் என்னை ஹைதராபாத் அழைத்து செல்லவில்லை.

ஒரு விருது விழாவில் கலந்து கொள்ள ஹைதராபாத் வந்தேன். அடுத்த நாள் காலையில் போக வேண்டிய விமானத்தை தவற விட்டேன். என்னுடைய பயணம் மற்றும் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை விருது வழங்குபவர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

இன்னும் அந்த டிக்கெட் என்னிடம் தான் உள்ளது. இந்த வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.சூழ்நிலையால் நான் பாதிக்கபட்டுள்ளேன்.அது ஒரு சோதனையாக இருந்தது.நான் அந்த சம்பவத்தை மறுப்பதற்கில்லை.உண்மை இல்லாதது வெளியே சொல்லப்பட்டு உள்ளது.

நான் மனம் சோர்வடைந்துவிடவில்லை.நான் ஏன் அவ்வாறு இருக்க வேண்டும். எனக்கு உண்மை தெரியும். அதிர்ஷ்டவசமாக நான் விடுதலையானேன். எனக்கு ஆதரவாக எனது குடும்பம் இருந்தது. எனது பெற்றோர்கள் நான் எப்போதும் ஒரு கண்ணியமான் வாழ்க்கையை தொடர விரும்பினர்.இவ்வாறு அவர் கூறினார்

சுவேதா 3 மாதம் அனுப்பபட்ட பெண்கள் காப்பகத்தில் கடத்தலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தன்னார்வத்துடன் ஆங்கிலம் மற்றும் இந்தி இந்திய பாரம்பரிய இசை கற்று கொடுத்து உள்ளார்.