என் தமிழ்

ஒபாமா முகமூடி அணிந்து அமெரிக்க ஹோட்டலில் கொள்ளையடித்த திருடன்

Obama_mask

நவம்பர் 1, அமெரிக்காவில் அதிபர் ஒபாமா போன்று முகமூடி அணிந்து கொண்டு துப்பாக்கி முனையில் கொள்ளையன் ஒருவன் ஹோட்டலில் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் சலேம் என்ற நகரில் ஒரு துரித உணவு ஓட்டலில் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது.

அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் சாப்பிட வந்தார். திடீரென அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதைப் பயன்படுத்தி அந்த நபர் ஓட்டலில் இருந்த பணப் பெட்டியை கொள்ளையடித்து சென்று விட்டார். இக்காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. அதற்கு முன்னதாக ஒரு அங்காடியில் புகுந்து வேறு ஒரு நபரின் முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து இருக்கிறார்.

இந்த கொள்ளை சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to Top