ஜொகூர் பாரு, 31 அக்டோபர் 2026 : இந்திய இசை ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், BR Films நிறுவனம் வழங்கும் ‘Legends Vibe – Live in JB’ பிரம்மாண்ட நேரடி இசை நிகழ்ச்சி வரும் டிசம்பர் 5ஆம் தேதி ஜொகூர் பாருவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபலப் பாடகர்களான சுரேஷ் பீட்டர்ஸ், அனுராதா ஸ்ரீராம், கிரிஷ், பிரியங்கா மற்றும் அந்தோணி தாசன் ஆகியோர் பங்கேற்று தங்களது பிரபலமான பாடல்களைப் பாடவுள்ளனர்.
2026 டிசம்பர் 5ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு, ஜொகூர் பாருவில் உள்ள பாரடைக்ம் மால் கன்வென்ஷன் சென்டரில் இந்நிகழ்ச்சி நடைபெறும். சென்னையைச் சேர்ந்த ஜென்டில்மேன் இசைக்குழுவினரும் நேரடி இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளனர்.


நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகள் நான்கு பிரிவுகளாக விற்பனை செய்யப்படுகின்றன. சிக்கு புக்கு ரயில் (Chikku Bukku Rayil) பிரிவுக்கு ரிமு 499, கருப்புத்தான் (Karupputhan) பிரிவுக்கு ரிமு 299, ஜூன் பொன்னால் (June Ponnal) பிரிவுக்கு ரிமு 199, கல்யாண விருந்து (Kalyana Virunthu) பிரிவுக்கு ரிமு 99 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரபலப் பாடகர்களின் நேரடி நிகழ்ச்சிகள், உற்சாகமான இசை மற்றும் பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் பாடல்களுடன் இசை ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை myTicket Asia இணையத் தளம் வழியாகப் பெற்றுக்கொள்ளலாம். ரசிகர்கள் முன்கூட்டியே நுழைவுச்சீட்டுகளை வாங்கிக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.







