த்ரிஷா-ராணா பிரிவுக்கு ராகிணி காரணமா?

த்ரிஷா-ராணா பிரிவுக்கு ராகிணி காரணமா?

Ragini-Dwivedi-Hot-Stills_89

அக்டோபர் 31, த்ரிஷா-ராணா காதல் முறிவுக்கு கன்னட நடிகை ராகிணி திவிவேதி காரணம் என்று கூறப்படுகிறது.த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். நாங்கள் நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்று இருவரும் கூறி வந்தனர். ஆனால் விருது விழா உள்ளிட்ட சினிமா நிகழ்ச்சிகளில் இருவரும் ஜோடியாக பங்கேற்று வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். ராணாவுடனான பிரிவு பற்றி தனது இணைய தள பக்கத்தில் சூசகமாகத் தெரிவித்திருந்தார் த்ரிஷா. மற்ற நடிகைகளுடன் நெருங்கி பழகுவதால்தான் ராணாவை த்ரிஷா பிரிந்தார் என்று பேசப்படுகிறது. ஸ்ரேயா, நயன்தாரா, பிபாஷா பாசு உட்பட பல்வேறு நடிகைகளுடன் ராணா ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் காதல் பிரிவு பற்றி ராணாவும் த்ரிஷாவும் வெளிப்படையாக ஏதும் தெரிவிக்கவில்லை. த்ரிஷா-ராணா காதலுக்கு தடையாக இருக்கும் நடிகை யார் என்பதுபற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ‘நிமிர்ந்து நில்’ படத்தில் நடித்த கன்னட நடிகை ராகினி திவிவேதிதான் இந்த காதல் முறிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ராணாவுக்கும், ராகினி திவிவேதிக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமான நட்புதான் பிரிவுக்கு காரணமாம். இதுபற்றி ராகிணியிடம் கேட்டபோது, ‘கடந்த இரண்டு வருடமாக ராணாவுடன் நட்பாகத்தான் பழகிவருகிறேன். தெலுங்கு படங்களில் நடிக்க ஐதராபாத் செல்லும்போது ராணாவைப் பார்ப்பேன். பேசுவேன். அவருடன் லஞ்சுக்கு செல்வேன். அதைத்தாண்டி எங்களுக்குள் ஏதுமில்லை. ஏன் தேவையில்லாமல் இதில் என் பெயரை இழுக்கிறார்கள் என தெரியவில்லை’ என்றார்.