அக்டோபர் 27, தேசிய முன்னணிக்கு எதிராக காழ்ப்புணர்வை பரப்பும் ஒர் இயக்கத்தின் பின்னணியில் சீனர்கள் இருப்பதாக சிலாங்கூர் அம்னோ துணை தலைவர் டத்தோ அப்தில் ஷக்கோர் இட்ருஸ் கூறியிருக்கிறார். இதனால் மாநிலத்தில் தேசிய முன்னணிக்கான சீன சமூகத்தின் ஆதரவு குறைந்து விட்டது என்றார் அவர்.
ஜனநாயகத் தேர்தலுக்கான மலாயாப் பல்கலைக்கழக மையத்தின்(யுஎம் செடெல்) ஆகக் கடைசி சர்வே பற்றி கருத்துரைத்த அவர் பக்காத்தான் ராக்யாட்டை சீனர்கள் தீவிரமாக ஆதரிக்கின்றனர் என்றார்.