அக்டோபர் 27, எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர் நிகழ்வில் கலந்துக்கொள்வார் என்று அவரது உதவியாளர் தெரிவித்தார். பல்கலைக்கழக நிர்வாகம் தடுத்தாலும் அன்வார் அங்கு செல்வது உறுதி.
”பல்கலைக்கழகம் முதல் சிறை வரை” என்ற தலைப்பிலான நிகழ்வில் உரையாற்ற டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைக்கப்பட்டிருந்தார்.
ஆயினும், அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் நல துணைவேந்தர் டத்தோ ரொஹானா யூசோப் சம்பந்தப்பட்ட நிகழ்வு சட்டவிரோதமானது என்றும், பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்றும் கூறினார்.
பாதுகாப்பு கருதி பல்கலைக்கழகம் போலீசாரின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் அறிவித்தார்.