அக்டோபர் 25, அம்னோ பொதுக்கூட்டத்தில் மற்ற கட்சிகள் தலையிடக்கூடாது என்று அம்னோ இளைஞர் பிரிவு செயற்குழு உறுப்பினர் அர்மான் அஸ்ஹா ஹனிபா கூறுகிறார்.
அம்னோவில் உணர்ச்சிகரமானக் கருத்துகளைத் தெரிவிக்கும் பேராளர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கெராக்கான் தலைமைச் செயலாளர் லியாங் டெக் மெங் தெரிவித்தார்.
இதற்கு அர்மான் கூறும்போது, அம்னோ கூட்டத்தில் தலையிடுவதைவிட கெராக்கான் அக்கட்சியை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துவது நல்லது என்று அவர் கூறினார்.