பற்களை அழகுபடுத்திய நடிகை ஸ்ரேயா

பற்களை அழகுபடுத்திய நடிகை ஸ்ரேயா

s5

நடிகை ஸ்ரேயாவுக்கு தமிழில் படங்கள் இல்லை. ரஜினி ஜோடியாக நடித்த சிவாஜி படம் 2007–ல் வந்தது. தொடர்ந்து விக்ரம், விஜய், தனுஷ் போன்றோருடன் நடித்தார். கடைசியாக 2011–ல் ரெளத்திரம் படத்தில் நடித்தார். அதன் பிறகு பட வாய்ப்புகள் நின்று போனது. தெலுங்கில் கோபாலா கோபாலா என்ற படத்தில் மட்டும் தற்போது நடித்து வருகிறார்.

ஸ்ரேயாவுக்கு பற்கள் தூக்கலாக இருப்பதாக ஏற்கனவே விமர்சனங்கள் கிளம்பின. இதையடுத்து தற்போது பற்களுக்கு விசேஷ சிகிச்சை எடுத்து அழகுபடுத்தி உள்ளார். எல்லா பற்களையும் ‘பாலிஷ்’ செய்து பளபளப்பாக்கியுள்ளார்.

படப்பிடிப்பில் நிறைய நொறுக்குத் தீனிகள் தின்றதால் அவரது பற்கள் நிறம் மாறியது. பிறகு பல் டாக்டரிடம் ஆலோசித்து அழகுபடுத்தி உள்ளார். ஸ்ரேயா கூறும்பேது, அழகான உறுதியான பற்கள் ஆரோக்கியத்தின் வெளிப்பாடு என்றார்.