கத்தி படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. படத்திற்கு தணிக்கை குழுவினர் யு சான்றிதழ் கொடுத்துவிட்டனர். இந்நிலையில் இப்படத்தின் பின்னணி இசைக் கோர்வைகளை முடித்துவிட்டதாக இசையமைப்பாளர் அனிருத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது கத்தி படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் தற்போது முடிவடைந்து விட்டது. என்னுடைய பிறந்தநாளுக்கு முன்னதாக இந்த வேலையை முடித்துவிட்டது மகிழ்ச்சி. தீபாவளிக்கு பட்டாசு ரெடியாகிவிட்டது என குஷியாக டுவிட் செய்துள்ளார்.
அனிருத் கத்தி படத்தின் பின்னணி இசையை முடித்துவிட்டார்.
