அக்டோபர், 15 தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய மேலும் 13 மலேசியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச மலேசிய காவல்படைத்தலைவர் டான் ஶ்ரீ காலிட் அபு பாக்கார் தெரிவித்தார்.
புக்கிட் அமான் காவல்த்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டான் ஶ்ரீ காலிட், அந்த 13 பேரும் ஷா ஆலமில் உள்ள ஓர் உணவகம் ஒன்றில் உணவருந்திக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
“நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகளை நாங்கள் அணுக்கமாக ஆராய்ந்து வருகிறோம். தீவிரவாத நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் இந்த நாட்டில் இடமில்லை.
கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி முதல் ஆகக் கடைசியாகக் கைது செய்யப்பட்ட 13 பேரோடு சேர்த்து இதுவரை நாட்டில் 36 பேர் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.