மாட்சிமை தாங்கிய மாமன்னரின் 87வது பிறந்த நாள் விழாவில் “PJN” எனும் உயரிய டத்தோ விருது பெற்ற மஇகா செலாயாங் தொகுதி தலைவர் மதிப்புமிகு டத்தோ பி.பழனியப்பன் அவர்களுக்கு பாராட்டு விருந்து நிகழ்வு செலாயாங் தொகுதி மஇகாவின் ஏற்பாட்டில் 5 ஜூலை 2014 அன்று ரவாங் ஃபூக் செங் (Fook Seng) உணவகத்தில் சிறப்பாக நடந்தேறியது. இந்நிகழ்வு தொகுதியின் துணைத்தலைவர் திரு.M.B ராஜா அவர்களின் தலைமையில் ஆடல் பாடல் நிகழ்வோடு வெகுவிமரிசையாக நடந்தேறியது.