பூஜை படத்திற்கு யுஏ சான்றிதழ்: மறுதணிக்கை செய்ய படக்குழு முடிவு

பூஜை படத்திற்கு யுஏ சான்றிதழ்: மறுதணிக்கை செய்ய படக்குழு முடிவு

Andrea Jeremiah and Vishal in Poojai Movie Posters

விஷால்-சுருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘பூஜை’. இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இப்படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனமும், வேந்தர் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். படத்தில் இடம்பெற்றுள்ள அதிபயங்கர சண்டைக்காட்சிகளுக்காக இப்படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்திருப்பதாக தணிக்கைக் குழுவினர் கூறியுள்ளனர்.

இருந்தும், படத்திற்கு யு சான்றிதழ் பெற படக்குழுவினர் பெரிதும் முயன்று வருகின்றனர். இதற்காக, படத்தில் சில காட்சிகளை தணிக்கை செய்து மீண்டு தணிக்கை குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்க தயாரிப்பாளர் தரப்பில் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் சத்யராஜ், ராதிகா சரத்குமார், சூரி, பிரதாப் போத்தன், தலைவாசல் விஜய், கௌசல்யா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.