வட சென்னையில் நடந்த உண்மை சம்பவம் ‘ஆக்கம் என்ற பெயரில் படமாகிறது. இதுபற்றி இயக்குனர் வேலுதாஸ் ஞானசம்பந்தம் கூறியது:ஒருவன் எங்கு பிறக்கிறான் என்பதை வைத்து அவன் வாழ்க்கை நிர்ணயிக்கப்படுவதில்லை. எந்த சூழலில் வளர்கிறான் என்பதை பொறுத்தே எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. வடசென்னையில் பிறந்து தான் தோன்றித்தனமாக வளர்ந்த ஒருவனின் வாழ்க்கை எப்படியெல்லாம் மாற்றம் அடைகிறது என்பதை மையமாக வைத்து இக்கதை உருவாகி உள்ளது. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இதன் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. புதுமுகம் சதீஸ்ராவன் ஹீரோ. வைதேகி ஹீரோயின். ரஞ்சித், தருண்குமார், பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு. ஸ்ரீகாந்த் தேவா இசை. இ.செல்வம், இ.ராஜா தயாரிக்கின்றனர். 2கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இறுதிகட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
வடசென்னை உண்மை சம்பவம் படமாகிறது
