சரத்குமார் இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் சண்டமாருதம். அவரது மனைவி ராதிகா சரத்குமார், மேஜிக் பிரேம்ஸ் லிஸ்பன் ஸ்டீபனுடன் இணைந்து தயாரிக்கிறார். சரத்குமாரின் கதைக்கு, க்ரைம் எழுத்தாளர் ராஜேஷ் குமார் திரைக்கதை அமைத்துள்ளார். ஏ.வெங்கடேஷ் வசனம் எழுதி இயக்குகிறார். இதில் சரத்குமாருக்கு ஓவியா, மீரா நந்தன் என்ற இரண்டு ஜோடிகள்.
இதில் ஒரு ஜோடியான ஓவியாவுடன் சரத்குமார் பாங்காக்கில் டூயட் பாடி ஆடிவிட்டு திரும்பியிருக்கிறார். “சீனியர் நடிகரான சரத்குமாருடன் ஜோடியாக நடிக்கிறீர்களே?” என்று கேட்டபோதெல்லாம், ஜோடியெல்லாம் இல்லை படம் வந்த உடன் பாருங்கள் என்று பதில் சொல்லிக் கொண்டிருந்த ஓவியா சரத்குமாருடன் படு கவர்ச்சியாக ஆடிப்பாடியிருக்கிறார். பாடல் காட்சி மட்டுமின்றி படம் முழுக்கவே ஓவியா கவர்ச்சியை தாராளமாக வாரி வழங்கி உள்ளார் என்கிறது பட வட்டாராம்.
சரத்குமார் நடித்த ஏய் படத்தை இயக்கிய ஏ.வெங்டேஷ் இதே பாங்காக்கில் நமீதா, சரத்குமார் பாடல் காட்சியை எடுத்தபோது நமீதா தொப்புளிலிருந்து தண்ணீரை உறிஞ்சி எடுப்பார் சரத்குமார். அதுபோன்று இந்த படத்தில் ஒரு காட்சியிருக்கிறதாம், அதனை இப்போதைக்கு சஸ்பென்சாக வைத்திருக்கிறார்கள்.
Previous Post: அரசு ஊழியர்களுக்கு வீட்டுக் கடன் அதிகரிப்பு