ரஜினிகாந்துடன் அமித்ஷா போனில் பேச்சு; அரசியலுக்கு இழுக்க பாரதீய ஜனதா திட்டம்

ரஜினிகாந்துடன் அமித்ஷா போனில் பேச்சு; அரசியலுக்கு இழுக்க பாரதீய ஜனதா திட்டம்

raja

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதாக பல ஆண்டுகளாக பேச்சு எழுந்து வருகிறது. இதுவரை ரஜினியும் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதை உறுதியாக கூறவில்லை அவ்வப்போது இதுகுறித்து ஊகத்தின் அடிப்படையில் ஏதாவது செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கும். தேர்தல் வந்துவிட்ல் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற விவாதம் தொடங்கிவிடும்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பிரசாரத்துக்கு சென்னை வந்த நரேந்திர மோடி, ரஜினிகாந்த் வீட்டுக்கே சென்று சந்திக்க அரசியல் அரங்கில் பரபரப்பும் எதிர்பார்ப்பும் அதிகமானது. ஆனாலும் ரஜினிகாந்த் வெளிப்படையாக எதையும் அறிவிக்க வில்லை.

அகில இந்திய தலைவர் அமித்ஷா ரஜினியுடன் 3 முறை போனில் தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அமித்ஷாவின் பேச்சு வார்த்தைக்கு பிறகு ரஜினி தரப்பிலும் மாற்றங்கள் தென்படுவதாக கூறப்படுகிறது.

ரஜினியிடம் பேசி அமித்ஷா நீங்கள் எங்கள் கட்சிக்கு வந்தால் முதல்வர் வேட்பாளர் நீங்கள் தான் என்று உறுதி அளித்துள்ளார். அதற்கு ரஜினி படப்பிடிப்பு முடியட்டும் பதில் சொல்கிறேன் என்று தெரிவித்து இருக்கிறார்.