எபோலா நோய் தாக்கி உள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவை சேர்ந்தவர் தாமஸ்துங்கன் (வயது 42). இவர் கடந்த 20–ந் தேதி லைபீரியாவில் இருந்து அமெரிக்காவில் உள்ள டல்லஸ் நகருக்கு வந்தார். அப்போது அவரை விமான நிலையத்தில் பரிசோதித்தனர். ஆனால் அவருக்கு நோய் எதுவும் இல்லை.
சில நாட்கள் கழித்து அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்தபோது எபோலா நோய் தாக்கி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தாமஸ்துங்கன் உயிரிழந்தார்.
இதன் மூலம் அமெரிக்காவில் முதன் முதலில் எபோலா நோய்க்கு ஒருவர் பலியாகி இருக்கிறார். இதனால் அமெரிக்காவிலும் இந்த நோய் பரவலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தாமஸ் துங்கனுடன் பழகிய 50–க்கும் மேற்பட்டோரை தனிமைப்படுத்தி அவர்களை மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர்.