தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள்: டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது

தீபாவளிக்கு கூடுதல் சிறப்பு ரெயில்கள்: டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது

Riding-Indian-Trains

கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக சென்னை எழும்பூர்-திருநெல்வேலி இடையே ‘தீபாவளி’ கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருநெல்வேலி-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வ.எண்.06714) திருநெல்வேலியில் இருந்து வருகிற 16 மற்றும் 30 ஆகிய தேதிகளில், இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

மறுமார்க்கமாக சென்னை எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் (வ.எண்.06713) சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 17 மற்றும் 31 ஆகிய தேதிகளில் இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரெயில்கள் வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, விருதாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். வ.எண்.06714 ரெயில் மட்டும் மாம்பலத்தில் நின்று செல்லும்.

திருநெல்வேலி-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வ.எண்.06716), திருநெல்வேலியில் இருந்து வருகிற 12 மற்றும் அடுத்த மாதம் (நவம்பர்) 2 ஆகிய தேதிகளில் மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 7.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

மறுமார்க்கமாக சென்னை எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் (வ.எண்.06715), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 13 மற்றும் அடுத்த மாதம் 3 ஆகிய தேதிகளில் இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரெயில்கள் வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பக்கோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இதில் வ.எண்.06716 ரெயில் மட்டும் மாம்பலத்தில் நின்று செல்லும்.

சென்னை எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரெயில் (வ.எண்.06015), சென்னை எழும்பூரில் இருந்து வருகிற 18-ந்தேதி இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை 9.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி மற்றும் வாஞ்சிமணியாச்சி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருநெல்வேலி-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வ.எண்.06016), திருநெல்வேலியில் இருந்து வருகிற 19-ந்தேதி மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு, அடுத்த நாள் காலை சென்னை எழும்பூருக்கு 7.20 மணிக்கு வந்து சேரும்.

இந்த ரெயில் வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பக்கோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சென்னை சென்டிரல்-கோவை அதிவிரைவு சிறப்பு ரெயில் (வ.எண்.06605), சென்னை சென்டிரலில் இருந்து வருகிற 27-ந்தேதி காலை 10.15 மணிக்கு புறப்பட்டு, அதே நாள் மாலை 6 மணிக்கு கோவை செல்லும். இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

கோவை-சென்னை சென்டிரல் பிரீமியம் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வ.எண்.00606), கோவையில் இருந்து வருகிற 26-ந்தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் அதிகாலை 5.45 மணிக்கு சென்னை சென்டிரல் வந்து சேரும். இந்த ரெயில் திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி மற்றும் பெரம்பூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரெயிலுக்கான முன்பதிவு வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது.

சென்னை சென்டிரல்-மைசூர்-சென்னை சென்டிரல் (வ.எண்.12007,12008) சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் வருகிற 12-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை கூடுதலாக 5 குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.