முழு நிலவு நாளில் சூரியன், பூமி, நிலவு ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும்போது, நிலவை பூமியின் நிழல் முழுமையாக மறைத்துவிடும். இந்த நிகழ்வே சந்திர கிரகணம் எனப்படும். இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம் ஏப்ரல் 15ம் தேதி நிகழ்ந்தது. இதையடுத்து, 2வது சந்திர கிரகணம் இன்று நடக்கிறது.இது குறித்து, மலேசியாவில் இந்த சந்திர கிரகணத்தை மாலை 7 மணிக்கு கோலாலம்பூர், சிரம்பான், மலாக்கா, ஈப்போவிலும், 6.25 மணிக்கு கூச்சிங்கிலும், 5.45 மணிக்குக் கோத்தாகினபாலுவிலும் பார்க்கலாம்.