குழந்தையை விழுங்கியதாக மலைப் பாம்பை அடித்து கொன்ற கிராமவாசிகள்

குழந்தையை விழுங்கியதாக மலைப் பாம்பை அடித்து கொன்ற கிராமவாசிகள்

shake

குழந்தையை விழுங்கியதாக நம்பிய ஆந்திர கிராம மக்கள், அழிந்துவரும் இனமாக கருதப்படும் மலைப்பாம்பை கல்லால் அடித்தே கொன்றுள்ளனர்.

ஆந்திராவின் கவுண்டம்பாளயம் என்ற இடத்தில் சாலை ஓரத்தில் சுமார் 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு வயிறு வீங்கிய நிலையில் காணப்பட்டது.

இதனைப் பார்த்த கிராமவாசிகள், மலைப்பாம்பு குழந்தையை உயிரோடு விழுங்கியதாக நினைத்தனர். இந்த விஷ்யம் ஊர் முழுக்க பரவிய நிலையில், குழந்தையை எப்படியாவது மலைப்பாம்பின் வயிற்றிலிருந்து மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் சரமாரியாக கற்களை எடுத்து அதன் மீது வீசினர்.

இதில் கடுமையாக காயமடைந்த மலைப்பாம்பு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனிடையே மறுநாள் மலைப்பாம்பின் வயிற்று பகுதியில் ஆடு ஒன்று வெளித்தள்ளிக் கொண்டிருந்ததை பார்த்த கிராம மக்கள், பாம்பின் வயிற்றில் குழந்தை இல்லை என உறுதி செய்தனர்.

இதனை அடுத்து மலைப்பாம்பை கோணிப் பையில் போட்டு, ஊருக்குள் கிராமவாசிகள் கொண்டு சென்றனர். இந்த விஷயம் அறிந்து அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மலைப்பாம்பின் உடலை மீட்டு, அதனை முறையாக மண்ணில் புதைத்தனர்.

இது குறித்து குப்பம் பகுதி வனத்துறை அதிகாரி ரெட்டப்பா கூறும்போது, ” வதந்தியை நம்பி ஊர் மக்கள் மலைப்பாம்பை கொன்றனர். அழிந்துவரும் இனமான மலைப்பாம்பு கொல்லப்பட்டது வருத்தம் அளிப்பதாக உள்ளது” என்றார்.