CoffeewithSiva

CoffeewithSiva

CofeewithSiva1

CoffeewithSiva என்ற தொடர் நிகழ்வின் ஆரம்ப விழாவும் முதல் நிகழ்வும் இன்று 04 ஜூலை 2014 பங்சரில் உள்ள காபி மேனியாவில் திரு. சிவராஜ் சந்திரன், ம இ கா வின் தேசிய இளைஞர் பிரிவு தலைவர் அவர்களால் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு ம இ கா வின் இளைஞர் பிரிவால் அரசியல் ஈடுபாடில்லாத இளைஞர்களின் எண்ணங்களை அறிய  நடத்தப் படுகிறது. நிகழ்வு நடக்கும் பகுதியில் இருக்கும் படித்த மற்றும் உயர் பதவிகள் வகிக்கும் இளைஞர் மத்தியில் அரசியல் மற்றும் சமுதாய பிரச்சனைகளை பற்றி உரையாடி அதற்கான தீர்வுகளை கண்டறியும்  முயற்சியே இந்த நிகழ்வாகும். இந்த அனைத்து நிகழ்வுகளையும் திரு. சிவராஜ் அவர்களே ஒருங்கிணைக்கிறார். அரசியல் தலைவர்கள் சாமானியர்களை சந்தித்து அவர்களின் எண்ணங்களை கேட்டறிவது அவ்வளவாய் நடைபெறுவதில்லை. திரு. சிவராஜ் அவர்கள் இந்த நிகழ்வின் மூலம் அந்த குறையை போக்கி பொது மக்களுடன் உறவை பலப்படுத்தும் முயற்சியை துவங்கிவுள்ளார்.

இத்தகைய நிகழ்வுகள் பல இடங்களில் நடத்தப்பட்டு இவை அனைத்திலும் கிடைத்த கருத்துகளை இறுதியாக ஒருங்கிணைத்து அந்த விவரங்கள் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திடம் அறிக்கையாக அளிக்கப்படும். இதன் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அறிந்து அதற்கு ஏற்ப அரசு சேவை வழங்க முடியும். இந்த நிகழ்வுகளில் பங்கேற்றவர்கள் பற்றிய விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

CofeewithSiva