ஜப்பானில் தலைநகர் டோக்கியோவில் இருந்து 210 கி.மீ. தொலைவில் மவுண்ட் ஆன்டேக் என்ற எரிமலை உள்ளது. நேற்று முன்தினம் உள்ளூர் நேரப்படி காலை சரியாக 11.53 மணிக்கு இந்த எரிமலை திடீரென வெடித்துச் சிதறத் தொடங்கியது. எந்தவொரு முன் எச்சரிக்கையும் வெளியிடப்படாத நிலையில் இந்த எரிமலைச்சீற்றம் ஏற்பட்டதால் அந்த பகுதியை சேர்ந்த குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் அதில் சிக்கித் தவிக்க நேரிட்டது. எரிமலை வெடித்துச் சிதறியபோது வெளிப்பட்ட சாம்பலும், பாறைத்துண்டுகளும் 3 கி.மீ. தொலைவுக்கும் அப்பால்வரை விழுந்தன. இந்த எரிமலை சீற்றத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது. 40 பேர் படுகாயம் அடைந்தனர். 45 பேர் காணாமல் போய் விட்டனர்.