பாரதீய ஜனதாவுடனான கூட்டணி முறிந்ததால் சிவசேனா மந்திரி ஆனந்த் கீதே தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்வார் என்று அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் கடந்த 25 ஆண்டுகளாக கூட்டணி கட்சிகளாக இருந்து வந்த சிவசேனாவும், பா.ஜனதாவும் அண்மையில் தங்களுடைய கூட்டணியை முறித்துக் கொண்டன. இதைத் தொடர்ந்து மராட்டிய சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவும், சிவசேனாவும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இந்த நிலையில் சிவசேனா சார்பில் மத்திய மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள ஒரே மந்திரியான ஆனந்த் கீதே பதவியை ராஜினாமா செய்வார் என்று சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். “பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்ததும் ஆனந்த் கீதே தனது ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுப்பார்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Previous Post: ஓ.பன்னீர்செல்வம் தமிழக புதிய முதலமைச்சராக பதவியேற்பு