உலக வங்கி எபோலா நோய் தடுப்புக்கு மேலும் நிதியுதவி.

உலக வங்கி எபோலா நோய் தடுப்புக்கு மேலும் நிதியுதவி.

6

மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோன் ஆகிய 3 நாடுகளில் எபோலா நோய் வேகமாக பரவி வருகிறது. இந்நோய் தாக்குதலில் இதுவரை 3 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். எபோலா நோய்க்கு தடுப்பு மருந்துகளோ, சிகிச்சை மருந்துகளோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், நோய் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து பணிகளையும் சர்வதேச மருத்துவ குழு மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் எபோலா நோய் பரவாமல் தடுப்பதற்கு தேவையான சுகாதார தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், மருத்துவ வசதிகளை மேற்கொள்ளவும் ரூ.10,374 கோடி நிதியுதவி அளிக்க உலக வங்கி நேற்று அனுமதி வழங்கி உள்ளது.