கோலாலம்பூர், 27 நவம்பர் 2026 : “வானத்தை எட்டும் இலக்கு, பூமியில் வேரூன்றிய வளர்ச்சி” (Menggapai di Langit, Mengakar di Bumi) என்ற கருப்பொருளில் முன்வைக்கப்பட்ட 2027ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இது, மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுடன் நாட்டின் எதிர்காலத்தை உறுதிப்படுத்தவும், நாட்டின் பொருளாதார வலிமையை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் மடானி அரசாங்கத்தின் முயற்சிகளில் முக்கியமான கட்டமாக அமைந்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட திட்டங்களும் முயற்சிகளும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு நேரடியாகப் பயனளிக்கும் வகையில் அமைய வேண்டும் என பிரதமர் அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தத் திட்டங்கள் மலேசியாவை மேலும் செழிப்பான, நியாயமான மற்றும் நலமான நாடாக உருவாக்குவதற்கான வலுவான அடித்தளமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.







