என் தமிழ்

FFM35 திரைப்பட விழாவில் ‘மக்காய்’ படத்திற்கு சிறந்த மூலக்கதை விருது : சன்-ஜே பெருமாள், சிவானந்தம் பெரியண்ணனுக்குச் சிறப்பு அங்கீகாரம்

கோலாலம்பூர், 22 நவம்பர் 2026 : 35ஆவது மலேசியத் திரைப்பட விழாவில் (FFM35), ‘MACAI’ திரைப்படத்துக்கான சிறந்த மூலக்கதை விருது சன்-ஜே பெருமாள் மற்றும் சிவானந்தம் பெரியண்ணன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகமான FINAS ஏற்பாடு செய்த இவ்விழாவில், திரைப்படத்தின் கதையை உருவாக்கிய இருவரின் படைப்பாற்றலையும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.

மலேசியத் திரைப்படத்துறையின் முக்கிய அங்கீகாரமாகக் கருதப்படும் FFM35 விழாவில் கிடைத்துள்ள இந்த விருது, ‘MACAI’ திரைப்படத்தின் படைப்புக் குழுவினருக்குக் கூடுதல் சிறப்பைச் சேர்த்துள்ளது. விருது பெற்ற சன்-ஜே பெருமாள் மற்றும் சிவானந்தம் பெரியண்ணன் ஆகியோருக்குத் திரையுலகினர் மற்றும் படக்குழுவினர் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

Scroll to Top