சோரயாவை வீழ்த்திய சாய்னா நேவால்.

சோரயாவை வீழ்த்திய சாய்னா நேவால்.

9

ஸ்குவாஷ் போட்டியில் பேட்மிண்டன் போட்டிக்கான பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில் இந்தியாவின் சாய்னா நேவால் 21-7, 21-6 என்ற நேர் செட்டில் ஈரானின் சோரயாவை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். 22 நிமிடங்களில் எதிராளியின் சவாலை முடிவுக்கு கொண்டு வந்த சாய்னா அடுத்து 2-ம் நிலை வீராங்கனை சீனாவின் வாங் யுஹானை எதிர்கொள்கிறார். அதே சமயம் இந்தியாவின் பி.வி.சிந்து 22-20, 16-21, 20-22 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் பெலட்ரிக்சிடம் போராடி வீழ்ந்தார். இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காமன்வெல்த் சாம்பியன் இந்தியாவின் காஷ்யப் 21-6, 21-6 என்ற செட் கணக்கில் ஆப்கானிஸ்தானின் இக்பால் அகமதுவை சுலபமாக வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
டென்னிசில் ஆண்கள் ஒற்றையரில் இந்திய வீரர்கள் யுகி பாம்ப்ரி 6-1, 6-0 என்ற நேர் செட்டில் ஜபோர் அல் முடவாவையும் (கத்தார்), சனம்சிங் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் அப்துல்ஹமீத்தையும் (குவைத்), பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 6-0, 6-0 என்ற நேர் செட்டில் கோடாவையும் (மங்கோலியா) சாய்த்து 3-வது சுற்றை எட்டினர்.