கோலாலம்பூர், 22 நவம்பர் 2026 : சீனா ஓபன் 2026 ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் மலேசியாவின் முன்னணி வீராங்கனை எஸ். சிவசங்கரி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார். அரையிறுதிப் போட்டியில், ஹாங்காங் வீராங்கனை எஸ். யுக் சானை 11-3, 11-5, 11-8 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சிவசங்கரி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
உலகத் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் சிவசங்கரி, இப்போட்டியில் முதல் நிலை வீராங்கனையாகக் களமிறங்கியுள்ளார். இறுதிப்போட்டியில் அவர் ஜப்பானின் இரண்டாம் நிலை வீராங்கனையான சடோமி வதனாபேவை எதிர்கொள்கிறார். உலகத் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ள வதனாபே, மற்றொரு அரையிறுதியில் இத்தாலியின் எம். ஸ்டெபனோனியை 11-8, 11-6, 11-8 என்ற நேர் செட்களில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.







