கோலாலம்பூர், 20 நவம்பர் 2026 : மகாகவி பாரதியாரின் சிந்தனைகளையும் படைப்புகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், மலேசிய மக்கள் முன்னேற்றக் கட்சியின் இளைஞர் அணியான பெலியா பிபிபி (Belia PPP Malaysia) சார்பில் தேசிய அளவிலான தமிழ்க் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது.
“மகாகவி பாரதியார்: நேற்று, இன்று, நாளை” என்ற கருப்பொருளில் நடைபெறும் இப்போட்டியில் தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் உயர்கல்வி மாணவர்கள் பங்கேற்கலாம். போட்டியாளர்கள் பாரதியாரின் வரலாறு, சிந்தனைகள் மற்றும் படைப்புகள் தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளைத் தமிழில் கையால் எழுதி சமர்ப்பிக்க வேண்டும்.
ஒவ்வொரு கல்விப் பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெறுவோருக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. தொடக்கப்பள்ளிப் பிரிவில் RM300, RM200, RM100 என்றும், இடைநிலைப்பள்ளிப் பிரிவில் RM500, RM300, RM200 என்றும், உயர்கல்விப் பிரிவில் RM800, RM500, RM300 என்றும் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வெற்றியாளர்கள் அனைவருக்கும் பதக்கம், சான்றிதழ் மற்றும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.
கட்டுரைகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் : நவம்பர் 30
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி டிசம்பர் 19ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள விஸ்மா MCA-வின் டேவான் சான் சூன் மண்டபத்தில் நடைபெறும்.
கூடுதல் விவரங்களை அறிய : 010-9009230







