என் தமிழ்

மக்கள் முற்போக்கு கட்சி(பிபிபி) இளைஞர் பிரிவு ஏற்பாட்டில் டிசம்பர் 19ஆம் தேதி பாரதியார் விழா : மாணவர்களுக்குத் தமிழ் கட்டுரைப் போட்டி ஏற்பாடு

கோலாலம்பூர், 20 நவம்பர் 2026 : மகாகவி பாரதியாரின் படைப்புகளையும் சிந்தனைகளையும் இன்றைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், மக்கள் முற்போக்கு கட்சி (PPP) இளைஞர் அணியான பெலியா PPP சார்பில், “மகாகவி பாரதியார்: அன்று, இன்று, நாளை” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

டிசம்பர் 19ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர் ஜாலான் அம்பாங்கில் உள்ள விஸ்மா MCA மண்டபத்தில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்நிகழ்ச்சி நடைபெறும். இதில் திரு. நிரஞ்சன் பாரதி மற்றும் பேராசிரியர் முனைவர் அ. செல்லப்பெருமாள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இந்நிகழ்ச்சியுடன் இணைந்து தொடக்கப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் உயர்கல்வி மாணவர்களுக்கான தமிழ்ப் கட்டுரைப் போட்டியும் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறும் மாணவர்களுக்குப் ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும்.

நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோர் Great Ticket இணையதளம் மூலம் நுழைவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். மாணவர்களுக்கு RM10, பெரியவர்களுக்கு RM20, VIP பிரிவுக்கு RM50, VVIP பிரிவுக்கு RM250, MIP பிரிவுக்கு RM500 எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு : 019-221 2131

Scroll to Top