மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸ்க்கு எதிரான பணிகளுக்கு இந்தியாவின் பங்களிப்பாக 12 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்க, பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை அமெரிக்காவில் நடைபெறும் 69-வது ஐக்கிய நாடுகள் சபையின் பொது கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பார் என்று வெளியுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐ.நா. தலைமை செயலக நிதியத்திற்கு 10 லட்சம் அமெரிக்க டாலர்களும், எபோலாவிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் கருவிகளுக்காக 2 லட்சம் அமெரிக்க டாலர்கள் தொகையையும் இந்தியா அளிக்க உள்ளது.
Previous Post: பிரான்ஸ் பிணைக்கைதி தலையை துண்டித்த அல்ஜீரியா தீவிரவாதிகள்.