அல்ஜீரியாவுக்கு சுற்றுலா பயணியாக சென்றிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஹெர்வ் கோர்டெல் (55) என்பவரை, ஜந்த் அல் கிலிபா என்ற தீவிரவாத அமைப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிணைக் கைதியாக பிடித்து சென்றது. அல்ஜீரியாவின் கேபிலி பகுதியில் தான் ஹெர்வ் கடத்தப்பட்டார். அங்கு அல்ஜீரிய போலீசாரும் ராணுவத்தினரும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்த நிலையில், அவரை தீவிரவாதிகள் படுகொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வீடியோவில், பிரான்ஸ் பிணை கைதியின் தலையை துண்டித்து கொல்லும் கொடூர காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Previous Post: சீனாவில் 45 பேர் பலி.