என் தமிழ்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் : இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய பேர்லி – தினா ஜோடி

கோலாலம்பூர், 18 நவம்பர் 2026 : ஹாங்காங் ஓபன் 2026 பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் மகளிர் இரட்டையர் நட்சத்திரங்களான பேர்லி டான் – எம். தினா ஜோடி, முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. போட்டித் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்த மலேசிய ஜோடி, முதல் சுற்றில் சீனாவின் ஃபான் ஷு தியான் – லுவோ சூ மின் ஜோடியை 21-13, 21-16 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தியது.

முதல் செட்டின் தொடக்கத்தில் சீன ஜோடி கடும் போட்டியளித்தாலும், அனுபவத்துடன் விளையாடிய பேர்லி – தினா ஜோடி ஆட்டத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி 21-13 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றியது.

இரண்டாவது செட்டிலும் இரு ஜோடிகளும் தொடக்கத்தில் சமநிலையில் விளையாடின. ஒரு கட்டத்தில் 7-7 எனப் புள்ளிகள் சமமாக இருந்த நிலையில், தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மலேசிய ஜோடி 21-16 என்ற கணக்கில் வெற்றியை உறுதிசெய்தது. இதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய பேர்லி – தினா ஜோடி, அடுத்ததாக ஹாங்காங்கின் லுய் லோக் லோக் – சாங் ஹியூ யான் அல்லது இயுங் ங்கா டிங் – இயுங் லுய் லாம் ஜோடிகளில் ஒன்றை எதிர்கொள்ளவுள்ளது.

Scroll to Top