கோலாலம்பூர், 17 நவம்பர் 2026 : ஜோகூர் மாநிலம் பத்து பஹாட் கடற்பகுதியில் இன்று நள்ளிரவு 12.10 மணியளவில் 3.2 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பத்து பஹாட்டிலிருந்து தென்மேற்கே 19 கிலோமீட்டர் தொலைவில், கடலுக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
மேலும், வடக்கு அட்சரேகை 1.7 பாகை, கிழக்கு தீர்க்கரேகை 102.8 பாகை என்ற புவியியல் அமைவிடத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது இந்தோனேசியாவின் தஞ்சோங் பாலாய்-மெராலிலிருந்து வடமேற்கே சுமார் 106 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.







