டாமான்சாரா டாமாய், 17 நவம்பர் 2026 : டாமான்சாரா டாமாய் வாழ் மக்களுடன் இணைந்து நடைபெற்ற ‘தீபாவளி ஃபீஸ்டா நைட் 2026’ நிகழ்ச்சி, மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிறைந்த கொண்டாட்டமாக அமைந்ததாக கோபிந்த் சிங் தியோ தெரிவித்தார். பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களுடன் இணைந்து தீபாவளியைக் கொண்டாடியதில் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நிகழ்ச்சி மக்களிடையே அன்பையும் நல்லுறவையும் பகிர்ந்துகொள்ளும் சிறந்த வாய்ப்பாக அமைந்தது என்றார்.
மலேசியாவின் தனித்துவமும் பன்முகத்தன்மையும் இத்தகைய கொண்டாட்டங்கள் மூலம் வெளிப்படுவதாகக் கூறிய அவர், தீபாவளி மகிழ்ச்சி தொடர்ந்து சமூகங்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். அனைவரையும் உள்ளடக்கிய, அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்த மலேசியாவை உருவாக்க இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும் என்றும் கோபிந்த் சிங் தியோ வலியுறுத்தினா







