சென்னை, 17 நவம்பர் 2026 : வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு ‘அக்வான்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் மேலும் வலுப்பெற்று நாளை (நவம்பர் 18) தீவிரப் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்வான் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நவம்பர் 20ஆம் தேதி நண்பகல் நெல்லூர் மற்றும் துனி இடையே ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அப்போது மணிக்கு 120 முதல் 130 கிலோமீட்டர் வேகத்திலும், இடையிடையே 145 கிலோமீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
இந்தப் புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 18ஆம் தேதி ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசவும் வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், அக்வான் புயலைக் கருத்தில் கொண்டு இந்தியக் கடலோரக் காவல் படை கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் மீனவர்கள் மற்றும் கப்பல்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. புயலின் நகர்வு மற்றும் நிலைமையைத் தனது கப்பல்கள், கண்காணிப்பு அமைப்புகள் மூலம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.







