என் தமிழ்

மலேசிய இந்திய காங்கிரஸ் நடத்திய தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் அன்வார் பங்கேற்பு

கோலாலம்பூர், 10 நவம்பர் 2026 : மலேசிய இந்தியர் காங்கிரஸ் (MIC) மற்றும் மலேசிய இந்தியக் கல்வி மேம்பாட்டு அமைப்பு (MIED) இணைந்து ஏற்பாடு செய்த தீபாவளி 2026 திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துகொண்டார்.

“ருமா தெர்புகா தீபாவளி 2026” என்ற பெயரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்தியச் சமூகத்தினருடன் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இத்தகைய நிகழ்ச்சிகள் பல்வேறு இன மக்களிடையே நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்தும் வாய்ப்பாக அமைகின்றன.

Scroll to Top